Php data types(தரவினங்கள்)
String
Strings என்பது எழுத்துக்களின் கோவையாகும்.
“T”,”Dinesh” ஆகியவை string க்கு உதாரணங்கள் ஆகும்.
No limit to size.
Integer:
முழு எண்களை சேமிக்க integer type பயன் படுகின்றது.
இவை positive அல்லது negative ஆக இருக்கலாம்.
குறிப்பிட்ட எல்லையை விட பெரிய எண்கள் float ஆக சேமிக்கப்படுகின்றது.
Float:
Fractional எண்களை சேமிக்கப் பயன் படுகின்றது.
உதாரணம்.
3.14,125.368
Boolean:
True or false மதிப்புகளை சேமிக்கப் பயன்படுகின்றது.
எனினும் இவை integer மதிப்புகளாகவே சேமிக்கபடுகின்றது.
அதவது 0 என்றால் false மற்ற எல்லா எண்களுமே true ஆகும்.
Array:
ஒன்றுக்கும் மேற் பட்ட மதிப்புகளை சேமிக்க பயன்படுகின்றது.
உதாரணம்:
Collection of color ,days of week.
Object
ஒன்றுக்கும் மேற்பட்ட complex variables ஐ சேமிக்கப் பயன்படுகின்றது.
Resource:
Php data அல்லாதவற்றை சேமிக்கப்பயன் படுகின்றது.
உதாரணம்.
A picture.
Resource டைப் ஆனது உபயோகத்தில் இல்லாத போது freed up செய்யப் பட வெண்டும்.
variables.:
variables என்பது நினைவக இடங்களுக்கு நாம் இடும் பெயர்களாகும்.
Php variables என்பது weekly typed என்பதை முன்னரே அறிவோம்.
Naming rules க்கு php ஒரு அறிமுகம் என்ற பாடத்தைப் பார்க்கவும்.
Php variables $ குறீயீட்டுடனே தொடங்கப்பட வேண்டும்.
variableக்கு மதிப்பு இருத்த = பயன் படுத்தப்படுகின்றது.
Example:
$name=”Dinesh”;
$age=24;
(பொதுவாக phpயில் பெரும்பாலான வாக்கியங்கள் semicolon(;) உடன் முடிக்கப்பட வேண்டும்.
Php யில் variable ந் பெயர்களானது case sensitive ஆகும்.
அதாவது $Name மற்றும் $name ஆகியவை வெவ்வேறு variable ஆகும்.
0 comments:
Post a Comment