PHP Tamil_2

Strings in php

Strings என்பது எழுத்துக்களின் கோவையாகும். பின் வருவன string க்கு உதாரணங்கள் ஆகும்.

“Kalmunai”
‘100’
“November 22,2013”

இவை single Quotes அல்லது double quotes க்கு இடையே எழுதப்படுகின்றன.
பின் வரும் string ஐ எடுத்துக்கொள்வோம்.

$var=”“my place “Kalmunai” is in SriLanka”.

அதாவது quotes க்குள் quotes வந்துள்ளது . இதை சரி செய்ய quotesஐ escape செய்ய வேண்டும்.

$var=“my place \“Kalmunai\” is in SriLanka”.

Echo() அல்லது print() உபயோகித்து strings ஐ பிரிண்ட் செய்யலாம்.

echo $var;
print $var;
$name=”Dinesh”;
echo “hello ,$name”;

மேலே உள்ள வாக்கியத்தில் $name ஆனது விரிவாக்கப்பட்டு

hello Dinesh

என உலாவியில் (browser) வெளியீடு செய்யப் படுகின்றது.

<html>
<head>
<meta http-equiv="Content-Type" content="text/html; charset=windows-1252">
<title></title>
</head>
<body>
<?php
$first_name="Dinesh" ; // put your code here;
$last_name="Thevarajah";
$full_name=$first_name.' '.$last_name;
$place="Kalmunai";
echo "<p><em>$full_name</em> residing at $place</p> "
?>
</body>
</html>

இதை c:/xampp/htdoc அல்லது c:/wamp/www என்ற ஃபோல்டரில் சேமிக்கவும்.உதரணமாக பெயர் abc.php என இருக்கலாம்.
இயக்குவதற்கு உலாவியில்(browser) localhost/abcd.php என்று கொடுத்தால் மேலே உள்ள நிரலில் $name மற்றும் $place விரிவாக்கப்பட்டு பின் வருமாறு உலாவியில் வெளியீடு செய்யப்படுகின்றது.

மேலே உள்ள நிரலில் உள்ளவாறு இரு string களை இணைப்பதற்கு dot பயன் படுத்தப்படுகின்றது
உதாரணம் :
$full_name=$first_name. ’ ‘.$last_name.

Strlen என்ற function கொண்டு ஒரு string ன் நீளத்தை அறியலாம்.
Example:
$num=strlen(‘some string’);

மேலும் சில string functions

Strtolower -lowercase letter க்கு மாற்றுவது
Strtoupper -uppercase letter க்கு மாற்றுவது
Ucfirst -stringன் முதல் எழுத்தை மட்டும் uppercase letter க்கு மாற்றுவது
Ucwords -string ன் ஒவ்வொரு வார்த்தையின் முதல் எழுத்தை மட்டும் uppercase letter க்கு மாற்றுவது
ஒரு string உடன் இன்னொரு stringஐ இணைப்பதால் concatenation assignment operator ஐ உபயோகிகலாம்.
Example.

$name=$name.$lastname

என்பதை

$name.=$lastname

என எழுதலாம்.

 


PREV     NEXT

0 comments:

Post a Comment