JAVA Tamil_5

அத்தியாயம் 2

Object-Oriented Programming

Object-Oriented Programming (OOP) என்பது தற்பொழுது புழக்கத்தில் உள்ள மிகச்சிறந்த programming முறையாகும். Java ஆனது இந்த முறையினை பின்பற்றித்தான் தான் இயங்குகின்றது. எனவே முதலில் Object-Oriented Programming எனும் முறையினையும் அதன் பயன்பாடுகளையும் மிகத் தெளிவாக அறிந்து தெரிந்துகொண்டால் மட்டுமே Java இல் நம்மால் புரோக்ராம்களை எழுதிக்கொள்ள இயலும்.
ஒரு குறிப்பிட்ட வேலையினை செய்வதற்காக ஒரு புரோக்ராம் எழுத வேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதனை OOP முறையில் ஒரு Class ஆக எழுத வேண்டும். class என்பது variable களையும், function களையும் கொண்ட தொகுப்பு ஆகும்.
எடுத்துக்காட்டாக புத்தகங்களை பற்றிய தகவல்களை கையாள்வதற்காக ஒரு புரோக்ராம் எழுதுகின்றோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்கென்று ஒரு class எழுத வேண்டும். அந்த class இற்கு நாம் Book என்று பெயர் கொடுக்கலாம். இந்த Book எனும் class இனுள் நாம் பதிந்து வைத்துக் கொள்ளவேண்டிய தகவல்களுக்காக variable களை உருவாக்க வேண்டும். BookName, AuthorName, Publisher, Price முதலிய தகவல்கள் Book Class இற்கு தேவையெனில் நாம் variable களை அதனுள் உருவாக்கலாம். இத்தகைய variable களை data members என்று அழைக்கின்றோம்.
இவ்வாறு ஒரு class இன் உள் உருவாக்கப்பட்ட data member களைச் சார்ந்தோ அல்லது சாராமலோ நாம் பல function களை class களினுள் எழுதி கொள்ளலாம். இவ்வாறு class இனுள் எழுதப்படும் function களை Method என்று அழைக்கின்றோம்.
ஆக data members(variable) மற்றும் methods (function) ஆகியவற்றை கொண்டு குறிப்பிட்ட ஒரு வேலைக்காக எழுதப்படும் புரோக்ராம் முறையே class ஆகும்.
உங்களுக்கு ‘C’ மொழியில் புரோக்ராம் எழுத தெரிந்திருக்குமேயானால் Struct என்றழைக்கப்படும் structure களைப் பயன்படுத்தியிருப்பீர்கள். அதில் நாம் வெறும் variable களை மட்டும் கொண்டு ஒரு structure இனை உருவாக்கி தகவல்களை சிறப்பாக பயன்படுத்துகின்றோம். அத்தகைய Structure களின் advanced version ஆகவே class -கள் பயன்படுகின்றன.

ஒரு முறை ஒரு class எழுதப்பட்டுவிட்டால் அதனை பயன்படுத்தி நம்மால் Object களை உருவாக்கிக்கொள்ள இயலும். சுருக்கமாக கூறினால் class ஆனது ஒரு user defined data type ஆகப் பயன்படுகின்றது. அதாவது int, char, float, double முதலிய data type களைப் பயன்படுத்தி எவ்வாறு நாம் variable களை உருவாக்கி பயன்படுத்துகின்றோமோ அது போல நாம் எழுதும் class -கள் data type களாக இயங்குகின்றன. அவற்றைக்கொண்டு நம்மால் variable களை உருவாக்கிக் கொள்ள இயலும். அத்தகைய variable களையே நாம் Object என்று அழைக்கின்றோம். இவ்வாறு class களை உருவாக்கி அதன்மூலம் Object களை உருவாக்கி பயன்படுத்தும் முறையினைத்தான் Object-Oriented Programming என்று அழைக்கின்றோம்.

 


PREV     NEXT

0 comments:

Post a Comment