example
class book{
String bookname;
String authorname;
String publisher;
int price;
public void store(String tbookname, String tauthorname,
String tpublisher, int tprice)
{
bookname=tbookname;
authorname=tauthorname;
publisher=tpublisher;
price=tprice;
}
public void display()
{
System.out.println(“Book Name : “ + bookname);
System.out.println(“Author Name : “ + authorname);
System.out.println(“Publisher : “ + publisher);
System.out.println(“Price : “ + price);
System.out.println(“—————————————————”);
}
public static void main(String arg[])
{
book java = new book();
book oracle = new book();
java.store(“Java Language”,”Packianathan”,
”AnuRagham”,250);
oracle.store(“Oracle Datbase”,”Packianathan”,
”AnuRagham”,125);
java.display();
oracle.display();
}
}
இந்த புரோக்ராமில் Book என்றொரு class எழுதப்பட்டிருப்பதக் கவனியுங்கள். இங்கு main( ) Function இனைத்தவிர்த்து அதற்கு முன் பல வரிகள் இருப்பதைக் கவனியுங்கள். அவற்றில் முதலில் BookName, AuthorName, Publisher, Price ஆகிய variable -கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவை இந்த classஇன் data member கள். அதனைத்தொடர்ந்து Store மற்றும் display என்று இரண்டு function -கள் இருக்கின்றன. இவை Methods என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் store function ஆனது parameter களின் வழியாக மதிப்புக்களை பெற்று அவற்றை data member களில் பதிந்துவைப்பதற்கு பயன்படுகின்றது. அதுபோல் display function ஆனது data member களில் உள்ள மதிப்புக்களை Display செய்து பார்ப்பதற்கு பயன்படுகின்றது. இந்த புரோக்ரமினை Compile செய்து இயக்கும்பொழுது main( ) function இல் இருந்து தான் புரோக்ராம் இயங்க ஆரம்பிக்கும். இதனுள் Book java = new Book ( ) ;
Book oracle = new Book ( ) ;
என்று கொடுக்கப்பட்டிருப்பதை கவனியுங்கள். இதுவே ஒரு class இலிருந்து Objectகளை உருவாக்கும் முறை.
முதலில் class இன் பெயரினைக் கூறி, பின்னர் உருவாக்குகின்ற Object இன் பெயரினை சொல்ல வேண்டும். இங்கு java மற்றும் oracle என்பன Book Class இலிருந்து உருவாக்கப்படும் Object கள் ஆகும்.
அடுத்து நாம் = எனும் assignment operator இனை கொடுத்து அதனைத்தொடர்ந்து new Book( ) என்று கொடுத்திருக்கின்றோம். இவ்வாறு கொடுக்கும் பொழுது தான் உண்மையில் Class இன் Object ஆனது புதிதாக உருவாகின்றது.
இவ்வாறு Object ஆனது உருவாகும் பொழுது அந்த Class இனுள் நாம் வரையருத்திருக்கின்ற data member களும் மற்றும் method களும் அந்தந்த Object களுக்கென்று தனித்தனியாக உருவாகின்றன. அதாவது இங்கு java என்ற Object இற்கு என்று தனியாக Book Name, Author Name, Publisher, Price முதலிய Variable களும் store( ) மற்றும் display( ) ஆகிய function களும் உருவாகின்றன. இதேபோன்று தனியாக Oracle Object இற்கும் உருவாகும்.
இது போல் எத்தனை Object கள் உருவாக்குகின்றோமோ அத்தனைக்கும் தனித்தனியாக datamember கள் மற்றும் method கள் இருப்பதாக நினைவில் கொள்ளுங்கள். மேலும் புரோக்ரமினை நீங்கள் உற்றுப்பார்க்கையில் java.store(‘Java Language’,‘Packia Nathan’,‘Anuragham’, 150);
oracle.store(‘Oracle Database’,‘Packia Nathan’,’Anuragham’, 125) ; என்று இருப்பதைக் கவனியுங்கள். அதாவது java என்ற Object இல் உள்ள store function இனையும் அதுபோல oracle என்ற object இல் உள்ள store function இனையும் பயன்படுத்தி அந்தந்த Object களில் உள்ள data member களில் தகவல்களைப் பதிந்து கொள்கின்றோம்.
இங்கு Object பெயரிற்கும் function இன் பெயரிற்கும் நடுவில் ஒரு புள்ளி இருப்பதைக் கவனியுங்கள். அதாவது இந்த Object இல் இருக்கின்ற function என்று குறிப்பதற்காக இவ்வாறு கொடுக்கப்படுகின்றது. மேலும் இதே முறையினை பயன்படுத்தி java.display( )
oracle.display( )
என்று display function களை இயக்கி அந்தந்த Object களில் பதிந்து வைத்து இருக்கின்ற மதிப்புக்களை display செய்து பார்த்துக்கொள்கின்றோம்.
0 comments:
Post a Comment