For Loop
C மொழியில் இருப்பது போன்றே Java இலும் for, while, do while ஆகிய loop கட்டளைகள் இருக்கின்றன. for loop இனைக் கொண்டு குறிப்பிட்ட தடவைகளில் ஒரே கட்டளைத் தொகுப்புகளை இயக்கிக்கொள்ள முடியும். for (initialization; condition; increment/decrement){
.....
}
for Loop ஆனது மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. முதலில் intialization பகுதி இருக்கின்றது. இதில் நாம் நமது variable -களில் ஒரு மதிப்பினைப் பதிய வேண்டும். அடுத்து condition பகுதியில் நமக்கு வேண்டியபடி condition களை வரையறுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து increment / decrement பகுதியில் நமது condition -கள் நிறைவேறும் வகையில் மதிப்புகள் வரும்படிக்கு statement களை அமைக்க வேண்டும். example
class pro1_5
{
public static void main(String arg[])
{
int x;
for (x=1; x<=100; x++)
{
System.out.println(x);
}
}
}
இந்த புரோக்ராமில் நாம் 1 இலிருந்து 100 வரை எண்களை Display செய்வதற்குரிய for loop இனை இயற்றியிருக்கின்றோம். இங்கு முதலில் x என்னும் variable இல் 1 என்ற மதிப்பினை intialize செய்கின்றோம். அடுத்து condition இல் x<=100 என்று கொடுத்திருக்கின்றோம். இதன்படி x இல் 100 அல்லது அதற்கு குறைவான மதிப்புகள் வரை இருக்கலாம். 100 இற்கு மேற்பட்ட மதிப்புகள் வரும்பொழுது loop இனை விட்டு வெளியே வந்துவிட வேண்டும் என்று பொருள். increment பகுதியில் x++ என்று கொடுக்கப்பட்டிருப்பதை கவனியுங்கள். இதன்படி x இல் தற்பொழுது இருக்கும் மதிப்போடு 1 என்ற மதிப்பினை கூட்டிக்கொள்ள வேண்டும் என்று பொருள். loop ஆனது ஒவ்வொரு முறையும் condition இனை சரிபார்த்து விட்டு அதனுள் கொடுக்கப்பட்டிருக்கும் கட்டளைகளை இயக்குகின்றது. பின்னர் condition பகுதி இயங்குகின்றது. இது போன்று மீண்டும் மீண்டும் loop இன் உள் இருக்கின்ற தகவல்கள் இயங்குகின்றன. while loop while loop ஆனது வெறும் condition இனை மட்டுமே கொண்டுள்ளது. for loop ஐ போல intialization மற்றும் increment பகுதிகள் இங்கு கட்டளையினுள் இல்லை. ஆனால் நாம் அவற்றை கட்டாயமாக வேறு இடங்களில் பயன்படுத்த வேண்டும். while (condition)
{
statements...
}
example
class pro1_6
{
public static void main(String arg[])
{
int x;
x=1;
while (x!=100)
{
System.out.println(x);
x++;
}
}
}
இங்கு x என்ற variable உருவாக்கப்பட்டிருக்கின்றது. while loop ஆரம்பிப்பதற்கு முன்னே x=1; என்று intialize செய்யப்பட்டிருப்பதை கவனியுங்கள். while loop இன் உள் x!=100 என்று கொடுக்கப்பட்டிருப்பதையும் கவனியுங்கள். இதன்படி x இல் 100 இனை தவிர வேறு எந்த மதிப்புகள் இருந்தாலும் loop இன் உள் செல்லலாம் என்று பொருள். x++ என்ற increment statement loop இன் உள் இருப்பதனை கவனியுங்கள். do while loop இதுவும் while loop -இனைப் போலவே இயங்குகின்றது. ஆனால் while loop ஆனது முதலில் condition இனை check செய்துவிட்டு பின் கட்டளைகளை இயக்குகின்றது. ஆனால் do while loop ஆனது முதலில் கட்டளைகளை இயக்கிவிட்டு பின்னர் condition இனை check செய்யும். do
{
Statement....
}while(condition);
example
class pro1_7
{
public static void main(String arg[])
{
int x;
x=1;
do
{
System.out.println(x);
x++;
}while (x!=100);
}
}
இங்கு முதலில் do இனை அடுத்து இருக்கின்ற கட்டளைகள் இயங்கும் பின்னர் தான் while இல் இருக்கின்ற condition சரிபார்க்கப்படும். இந்த வகையில் ஒரே ஒரு தடவையாவது do while loop இனுள் உள்ள கட்டளைகள் இயங்கிவிடும் என்பதனை நினைவில் கொள்க.
0 comments:
Post a Comment