Operators
புரோக்ராம்களை எழுதுவதற்கு Operator களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது ஆகின்றது. Arithmetic Operators, Relational Operators, Logical Operators என பல வகைகளாக Operator கள் இருக்கின்றன. +, -, *, / முதலானவை Arithmetic Operator கள் ஆகும். இவற்றைக் கொண்டு Calculation -களைச் செய்து கொள்ளலாம்.
<, >, <=, >=, ! =, = = முதலானவை Relational Operator -கள் ஆகும். இவற்றில் <, > என்பது முறையே Less than மற்றும் Greater than என்பதனைக் குறிக்கின்றது. <=, >= ஆகியவை முறையே Less than or equal to மற்றும் greater than or equal to ஆகியவற்றை குறிக்கின்றது. ! = என்பது not equal to என்பதனைக் குறிக்கின்றது. == என்பது equal to என்பதனைக் குறிக்கின்றது. இந்த Relational Operator களைக் கொண்டு இரண்டு எண்களில் எது பெரியது, சிறியது, அல்லது சமமாக இருக்கின்றதா அல்லது இல்லையா போன்ற தகவல்களை Condition - களினுள் பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம்.
&&, ||, ! முதலானவைகள் Logical Operator -கள் ஆகும். ஒன்றுக்கு மேற்பட்ட கண்டிசன்களைச் சரிபார்ப்பதற்கு இந்த Logical Operator களைப் பயன்படுத்துகின்றோம். && என்பது Logical AND ஆகும். இரண்டு Condition - கள் இருக்கின்ற இடத்தில் இரண்டுமே கட்டாயமாக பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற நிலையில் இந்த && (AND Operator) இனை பயன்படுத்திக் கொள்ளலாம். மாறாக இரண்டு Condition -கள் இருக்கின்ற இடத்தில் ஏதாவது ஒன்று பூர்த்தியானால் போதும் என்றவாறு இருந்தால் அதற்கு || (OR Operator) பயன்படுகின்றது. ! என்பது not Operator ஆகும். if Condition நாம் ஏற்கனவே Condition என்றால் என்ன என்பதனைப் பற்றி அறிந்திருக்கின்றோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள Syntax -இனைப் பயன்படுத்தி if Condition களை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். if (bodean Expression)
{
......
}
[else
{
......
}]
example
class pro1_3
{
public static void main(String argv[])
{
int x;
int y;
x=30;
y=50;
if (x > y)
{
System.out.println(“X is greater than Y”);
}
else
if (x < y)
{
System.out.println(“Y is greater than X”);
}
else
{
System.out.println(“Both Are Same”);
}
}
}
இந்த புரோக்ராமில் x மற்றும் y என்று இரண்டு int data type variable -கள் உருவாக்கப்பட்டு அவற்றில் சில மதிப்புக்களை பதிந்து இருக்கின்றோம். இங்கு if Condition ஐப் பயன்படுத்தி x இல் உள்ள மதிப்பு பெரியதா அல்லது Y இல் உள்ள மதிப்பு பெரியதா என்று கண்டுபிடிக்கும் பொருட்டு புரோக்ராம் எழுதியிருக்கின்றோம். முதலில் if condition இல் x ஆனது y இனை விட பெரியதா என்பதனை சரி பார்க்கின்றோம். அவ்வாறு இருப்பின் அந்த condition இன் உள்ளே உள்ள பகுதியானது இயங்குகின்றது. அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள else பகுதிகள் வேலை செய்யாது. ஒருவேளை முதலில் கொடுக்கப்பட்ட condition பொருந்தவில்லை எனில் else பகுதி தானாக இயங்குகின்றது. இங்கு else இல் மற்றுமொரு if condition இருக்கின்றது. அதில் y ஆனது x ஐ விட பெரியதா என்பதனை check செய்வதற்குரிய condition கொடுக்கப்பட்டிருக்கிறது. இது பொருந்தியிருப்பின் அதில் கொடுக்கப்பட்ட கட்டளைகள் இயங்கும். இல்லையெனில் கீழே உள்ள else பகுதியானது இயங்குகின்றது. குறிப்பு: if condition களில் else ஆனது கட்டாயம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது இல்லை. if வேலை செய்யவில்லை எனில் else பகுதி இருப்பின் அது தானாக வேலைசெய்யும். example
class pro1_4
{
public static void main(String arg[])
{
int rollno, tamil, english, maths, science, social, total;
String sname;
float avg;
rollno=1;
sname=”Reena”;
tamil=65;
english=80;
maths=50;
science=90;
social=75;
total=tamil+english+maths+science+social;
avg=total/5;
System.out.println(“Roll Number : “ + rollno);
System.out.println(“Student Name : “ + sname);
System.out.println(“Tamil : “ + tamil);
System.out.println(“English : “ + english);
System.out.println(“Maths : “ + maths);
System.out.println(“Science : “ + science);
System.out.println(“Social : “ + social);
System.out.println(“Total : “ + total);
System.out.println(“Average : “ + avg);
if (tamil>=40 && english>=40 && maths>=40 &&
science>=40 && social>=40)
{
System.out.println(“Result : Pass”);
}
else
{
System.out.println(“Result : Fail”);
}
}
}
இந்த புரோக்ராமில் நாம் Student இனுடைய marks களைப் பதிந்து அவர் அனைத்து பாடங்களிலும் 40 மதிப்பெண்கள் அல்லது அதற்கு அதிகமாக பெற்று தேர்ச்சியடைந்திருக்கின்றாரா என்பதனை அறிந்துகொள்ளும்படிக்கு எழுதியிருக்கின்றோம். இங்கு && என்ற AND Operator, if condition -களில் பயன்படுத்தப்பட்டிருப்பதை கவனியுங்கள்.
0 comments:
Post a Comment