JAVA Tamil_2

Data types and Variables

நமது Java புரோக்ராமில் பல்வேறு மதிப்புக்களை கையாள்வதற்கு Variable களை உருவாக்குவோம் . அவ்வாறு Variable களை உருவாக்கும்போது அவற்றில் எந்த வகையான மதிப்புக்களை பதியப்போகின்றோம் என்று கூற வேண்டும் . அதற்குத்தான் Datatype கள் பயன்படுகின்றன.
C மொழியில் இருப்பது போன்றே Java விலும் int, char, float முதலான Datatype கள் இருக்கின்றன. இவற்றில் வெறும் எண்களை கையாள்வதற்கு int Data Type ஐ பயன்படுத்துகின்றோம் . எண்களிலும் 123.456 முதலான மதிப்புக்களைப் பதிப்பதற்கு float Data Type பயன்படுகின்றது . எழுத்துக்களை கையாள்வதற்கு char Data Type பயன்படுகின்றது . இந்த Data Type களை தவிர்த்து பல்வேறு class கள் இருக்கின்றன. அவற்றைக் கொண்டு நாம் Variable களை உருவாக்கிக் கொள்ளலாம். பின்வரும் புரோக்ராமில் சில Variable களை உருவாக்கி அவற்றில் எவ்வாறு மதிப்புக்களை பதிந்து வைப்பது என்பதனை காணலாம் .

class pro1_2
{
public static void main(String arg[])
{
int rollno, tamil, english, maths, science, social, total;
String sname;
float avg;
rollno=1;
sname=”Reena”;
tamil=65;
english=80;
maths=50;
science=90;
social=75;
total=tamil+english+maths+science+social;
avg=total/5;
System.out.println(“Roll Number : “ + rollno);
System.out.println(“Student Name : “ + sname);
System.out.println(“Tamil : “ + tamil);
System.out.println(“English : “ + english);
System.out.println(“Maths : “ + maths);
System.out.println(“Science : “ + science);
System.out.println(“Social : “ + social);
System.out.println(“Total : “ + total);
System.out.println(“Average : “ + avg);
}
}

இந்த புரோக்ராமில் நாம் rollno, tamil, english, maths, science, social, total முதலிய Variable களை int data type இல் உருவாக்கியிருக்கின்றோம் . sname என்னும் Variable ஐ String என்னும் Class இன் Object ஆக உருவாக்கியிருக்கின்றோம் . இந்த String Class ஐ பயன்படுத்துவதன் மூலம் தொடர் எழுத்துக்களை (String கள் ) கையாளலாம் . avg என்னும் Variable ஆனது float data type இல் இருக்கின்றது .
உருவாக்கப்பட்ட Variable கள் அனைத்திலும் அவற்றிற்குரிய மதிப்புகள் பதியப்பட்டிருக்கின்றன. அவற்றில் உள்ள மதிப்புக்களை Screen இல் Display செய்வதற்காக
System.out.println
என்னும் Function உபயோகிக்கப்பட்டிருக்கின்றது.

நீங்கள் இப்பொழுது மிகத் தெளிவாக சில அடிப்படை Java Programing முறைகளை தெரிந்துகொள்ள வேண்டும் . எந்த Java புரோக்ராமிலும் ஒரு class எழுதப்பட்டிருக்கும் . இந்த புரோக்ராமில் class student என்று கொடுக்கப்பட்டிருப்பதை கவனியுங்கள். class களைப் பற்றி நாம் தெளிவாக பின்வரும் எடுத்துக்காட்டுகளிலும், அத்தியாயங்களிலும் காணலாம் . மொத்தத்தில் ஒரு Java புரோக்ராமானது ஒரு class இனுள் அடங்குகின்றது. இந்த class இனுள்
public static void main(String arg[])
என்ற function எழுதப்பட்டிருப்பதை கவனியுங்கள். இந்த function இருப்பின் நாம் ஒரு Java Application ஒன்றினை எழுதுகின்றோம் என்று பொருள். நம்முடைய Java புரோக்ராம் இயங்கும்போழுது main function இல் இருந்து தான் இயங்க ஆரம்பிக்கும். பின்வரும் Syntax ஐ கவனியுங்கள். இதில் இருப்பது போல தான் நீங்கள் Java Application களை எழுத வேண்டும் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

class
{
public static void main(String arg[ ])
{
...
}
}
மேற்கண்ட புரோக்ரமினை கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல் கம்பைல் செய்து இயக்கிப்பாருங்கள்.

 


PREV     NEXT

0 comments:

Post a Comment