JAVA TAMIL_1

அத்தியாயம் 1

இங்கே கீழே கொடுக்கப்பட்டிருக்கும் நம்முடைய முதல் Java புரோக்ரமினை அப்படியே ஏதாவது ஒரு
Text Editor இல் டைப் செய்துகொள்ளுங்கள். பின்னர் அதற்கு First.Java என பெயரிட்டு Save பண்ணுங்கள்.

class first
{
public static void main (String arg[ ])
{
System.out.println(“Welcome to the world of Java”);
}
}

பின்னர் Windows+R இனை enter பண்ணி வரும் Run டயலாக் box இல் cmd or command என type பண்ணுங்கள். பின்னர் வரும் command window இல்
cd \ jdk1.2
என டைப் பண்ணுங்கள். jdk1.2 எனும் Folder இனுள் செல்லும். இந்த Folder இல் தான் உங்கள் Source File களை உருவாக்கியிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டால் இங்கிருந்து
C:\JDK1.2>edit first.java
என்று டைப் செய்யுங்கள். கிடைப்பது Edit என்று MS-DOS இல் இருக்கும் ஒரு Text Editor ஆகும். அதைப்பயன்படுத்தி நாம் நமது Java Source Code களை எழுதிக்கொள்ள இயலும். இங்கு ப்ரோக்ராமினை டைப் செய்து Save செய்துவிட்டு வெளியில் வந்துவிடுங்கள். இப்பொழுது நாம் டைப் செய்த Source File ஐ Compile செய்ய வேண்டும். அதற்கு javac எனும் Tool பயன்படுகிறது . அதற்கு கீழே உள்ளவாறு கட்டளையைக்கொடுங்கள்.
C:\JDK1.2 >javac first.java
இந்த javac என்னும் Compiler Tool ஆனது நம்முடைய புரோக்ராம் முழுவதையும் Compile செய்து அதனை Byte coded class file ஆக உருவாக்கித்தருகின்றது. இப்பொழுது first.class என்னும் புதிய file ஒன்று உருவாகியிருக்கும் . அந்த file ஐ தான் நாம் இயக்க வேண்டும் . அதற்கு பின்வருமாறு கட்டளையைக் கொடுங்கள் .
C:\ JDK1.2> java first
இங்கு java என்னும் Tool, First என்னும் Byte coded Class File ஐ இயக்குகின்றது . தற்பொழுது நீங்கள் கீழே காண்பது போன்ற ஒரு Result ஐ காண்பீர்கள் .

Welcome to the world of Java

குறிப்பு

Java புரோக்ராம்களை எந்த Text Editor இல் வேண்டுமானாலும் உருவாக்கலாம். ஆனால் அதற்கு extention ஆனது கட்டாயமாக .java என்று இருக்க வேண்டும் . இவ்வாறு உருவாக்கப்பட்ட Source File ஐ javac என்னும் Compiler மூலம் Compile செய்ய வேண்டும் . புரோக்ராமில் ஏதாவது தவறுகள் இருந்தால் Compiler அந்த தவறுகளைக் காட்டும் . அவற்றைச் சரி செய்து மீண்டும் Compile செய்ய வேண்டும் . தவறுகள் வராத பட்சத்தில் java என்னும் Tool ஐ கொண்டு class file களை இயக்கிக்கொள்ளலாம்.

 


NEXT

2 comments:

  1. iWebServices is a top JavaScript development company providing end-to-end JS Framework development services. Hire our experienced JavaScript developer today.

    Read More:- https://www.i-webservices.com/javascript-development-company/

    ReplyDelete
  2. Third Party API and System Integration is an important part of website and app development. With iWEBSERVICES, you will get quick and seamless system integration services to help you save money and time equally. Get in touch with us to know more.
    Visit : https://www.i-webservices.com/system-integration/

    ReplyDelete