HTML Tamil_3

எச் டி எம் எல்

பந்திக் குறி ஒட்டு( Paragraph Tag)

பந்திக் குறி ஒட்டில் தொடக்கம் <P> இவ்வாறு இருக்கும். இது ஒரு புதிய பந்தி தொடங்குவதைக் குறிக்கிறது.

</p> என்னும் முடிவுக் குறி ஒட்டு பந்தி முடிவதைக் குறிக்கிறது.
இந்தக் குறி ஒட்டு எதற்கென்றால் ஒவ்வொரு பந்தியாக(Paragraph) பிரித்துக்காட்டப் பயன்படுகிறது. இதில் ஆரம்ப குறிஒட்டு ஒன்றை சேர்த்தால் கூட போதுமானது.

உதாரணத்தைக் கவனியுங்கள்..

<HTML>
<BODY>
<P>இந்த எளிய தமிழில் HTML தொடர் எளிமையாகவும், புதிய வாசகர்களுக்கும், HTML கற்க விருப்பமுள்ளவர்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது. </p><p>இந்த தளத்தைப் பற்றி உங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும் வரவேற்கிறோம். </P> <P>தொடர்ந்து உங்களின் நல்லாதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க கேட்டுக்கொள்கிறேன். <p> நன்றி. வணக்கம்.
<BODY>
</HTML>

இதன் வெளிப்பாடு இவ்வாறு இருக்கும்.

எனவே ஒரு பந்திக்கும்(Paragraph) அடுத்த பந்திக்கும்(Paragraph) இடைவெளி காண்பிக்க இந்த Pragraph Tag பயன்படுகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

இதைச் செயல்படுத்தி பார்க்க நோட்பேடில் மேற்கொண்ட நிரல்வரிகளை எழுதி Body Section -ல் ஒன்றிரண்டு பந்திகளை எழுதி அவற்றிற்கிடையில் Pragraph Tag-ஐப் பயன்படுத்திப் பாருங்கள்.

அதன் விளைவை உலவியில் திறந்து பார்த்தால் தெரியும். Pragraph Tag இடாத பந்திகள் அனைத்தும் இடைவெளியில்லாமலும் , Pragraph Tagஇட்ட பந்திகள் இடைவெளிவிட்டு அமைந்திருப்பதையும் காணலாம்.

Paragraph Tag-ல் அலைன்மெண்ட்

அதாவது இடது(left), வலது(Right), நடுப்புறம்(Center) மற்றும் நேர்த்தி(Justify) என நான்கு வகைகளில் பந்திகளை அமைக்கலாம்.

<P ALIGN = "left"> என்பது பந்தியை இடது இசைவிற்கும்,
<P ALIGN = "right"> என்பது பந்தியை வலது இசைவிற்கும்,
<P ALIGN = "center"> என்பது பந்தியை மைய இசைவிற்கும்
<P ALIGN = "justify"> என்பது நேர்த்தியான இசைவுக்கும் மாற்றுகிறது.

ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.

<HTML>
<BODY>
<P ALIGN="left">பந்தியை இடது இசைவிற்கும்</p>
<P ALIGN="right">பந்தியை வலது இசைவிற்கும்</p>
<P ALIGN="center">பந்தியை மைய இசைவிற்கும்</p>
<P ALIGN="justify">நேர்த்தியான இசைவுக்கும் மாற்றுகிறது</p>
</BODY>
</HTML>

இவற்றைப் போலவே <center></center> tag ஆனது ஒரு உரையை மையப்படுத்திக் காண்பிக்க பயன்படுத்தப்படுகின்றது.

அத்துடன் </br> tag ஆனது ஒரு வரியை முடித்து, அடுத்த வரிக்குச் செல்ல வேண்டும் என்பதை Browser-க்கு சொல்லப் பயன்படும் குறிஒட்டாகும்.

கீழக்காணும் எடுத்துக்காட்டைக் கவனியுங்கள்..

<HTML>
<HEAD>
<TITLE>THIS IS MY OWN PAGE</TITLE>
</HEAD>
<BODY>
<CENTER>வணக்கம் நண்பர்களே,<br> இது டினேஸ். நான் உங்களுக்கு எளிய தமிழில் HTML <br>coding பாடத்தினை<br> சுருக்கமாக எழுதி பதிவு செய்துள்ளேன்.<br> தொடர்ந்து இந்தத் தொடர்பதிவைப் <br> படித்து பயன்பெற வேண்டுகிறேன்.<br> நன்றி</CENTER>
</BODY>
</HTML>

இதன் வெளிப்பாடு

 


PREV     NEXT

0 comments:

Post a Comment