கிடைக்கோடுகள் (Horizontal Rules) <HR> என்ற கிடைக்கோட்டுக் குறி ஒட்டு, ஒரு கிடைக்கோட்டினை உருவாக்குகிறது.
ஒரு ஆவணத்தின் முக்கியப் பகுதிகளைப் பிரித்துக்காட்ட கிடைக்கோட்டுக் குறி ஒட்டு(<HR> tag) பயன்படுகிறது. <HR> குறி ஒட்டைப் பயன்படுத்தி வரையப்படும் கோட்டின் தடிமனைக் கூட தீர்மானிக்க முடியும். அவ்வாறு செய்வதற்கு <HR> குறி ஒட்டுடன் சில பண்புகளைச் சேர்க்க வேண்டும். SIZE மற்றும் NOSHADE என்பவை <HR> குறி ஒட்டுடன் அடிக்கடி பயன்படுத்தப்படும் பண்புகளாகும். வரையப்படும் கோட்டின் தடிமனைக் குறிக்க SIZE பண்பு பயன்படுகிறது.
NOSHADE பண்பு வரையப்படும் கோட்டை சாம்பல் நிறத்தில் (நிழலகற்றி) காட்டப் பயன்படுகிறது. கவனிக்க: <HR> முடிவு குறி ஒட்டு இல்லை. உதாரணமாக இந்த ஆவணத்தைப் பாருங்கள்.. <HTML>
<HEAD>
<TITLE> Horizontal Rules</TITLE>
</HEAD>
<BODY>
This is Horizontal rules
<!--கிடைமட்ட கோட்டின் தடிமனைக் காட்ட-->
<HR size="5">
This is Horizontal rules This is Horizontal rules This is Horizontal rules This is Horizontal rules
<!-- கிடைமட்டக்கோட்டில் உள்ள சாம்பல் நிறத்தை தவிர்க்க-->
<HR size="5" noshade >
</BODY>
</HTML> மேற்கண்ட HTML நிரல்வரிகளுக்கான வெளிப்பாடு... மேற்கண்ட படத்தில்...
1. கிடைமட்டக்கோடு கோடு <HR>
2. கிடைமட்டக் கோட்டின் தடிமன் ஐந்து புள்ளிகள் அதிகரிக்கப்பட்டிருக்கிறது...மேற்கண்ட வரியில் size="5" என்பதற்கு பதில் உங்களுக்கு விருப்பமான எண்ணை உள்ளிடலாம். எண்ணின் மதிப்பு அதிகரிக்க கோட்டின் தடிமன் அதிகமாகும்.
3. கிடைமட்டக் கோட்டில் வரும் சாம்பல் நிற நிழலை(shade)த் தவிர்க்க "no shade" என்ற சிறப்புப் பண்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல் நிறைய வடிவூட்டல் குறிஒட்டுகள் HTML ஆவணத்தில் பயன்படுத்தலாம்.
உதாரணமாக <b>dinesh</b> -> dinesh
<i>dinesh</i> -> dinesh
<u>dinesh</u> -> dinesh மேலேயுள்ளபடி <b></b>,<i></i>,<u></u> ஆகிய tag கள் பயன்படுகின்றன.
0 comments:
Post a Comment