HTML Tamil_5

எச் டி எம் எல்

Body tag-ல் சிறப்புப் பண்புகள்

<BODY> குறி ஒட்டில் பண்புகளைச் சேர்ப்பதன் மூலம்
பின்னணி நிறம்(BACKGROUND),
பின்னணியில் படம்(Background Image),
எழுத்தின் நிறம்(Font COLOR)
இணைப்புக் கோட்டின் நிறம்(LINK LINE COLOR)
போன்றவற்றைக் கொடுக்க முடியும். <BODY> குறிஒட்டில் (Tag ) BGCOLOR, TEXT, BACKGROUND, LINK, VLING, ALINK, LEFTMARGIN மற்றும் TOPMARGIN போன்ற பண்புகளைக் கொடுக்க முடியும்.
உதாரணம் :

<HTML>
<HEAD>
<TITLE>BGCOLOR AND TEXT COLOR</TITLE>
</HEAD>
<BODY BGCOLOR="red" TEXT="White">
இந்த HTML ஆவணம் பிண்ணனி நிறத்தையும், அதில் இடம்பெறும் எழுத்துக்களின் நிறத்தையும் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது பின்னணி நிறம் சிவப்பாகவும், அதில் இடம்பெறும் எழுத்துகள் வெண்மையாகவும் இருக்குமாறு BODY குறி ஒட்டில் சிறப்புப் பண்புகளைப் பயன்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது.
</BODY>
</HTML>

இதன் வெளிப்பாடு

பின்னணியில் படங்களை இணைப்பதற்கு TAG-ல் BACKGROUND என்ற சிறப்புப் பண்பைச் சேர்க்க வேண்டும்.
Syntax: <BODY BACKGROUND="IMAGE URL" >

உ.ம்.

<HTML>
<HEAD>
<TITLE>Background in BODY TAG</TITLE>
</HEAD>
<BODY BACKGROUND="D:\images\cute collection\a.jpg" text="white">
இந்த நிரல் HTML ஆவணத்தில் வலைபக்கங்களின் பின்னணியில் படங்களை வைக்கப் பயன்படும் background என்ற சிறப்புப் பண்பைப் பற்றியது
</BODY>
</HTML>

இதன் வெளிப்பாடு

LINK Attributions in BODY TAG

Link பண்பு:

HTML ஆவணத்தில், ஒரு ஆவணத்திலிருந்து மற்றொரு ஆவணத்திற்கு இணைப்பை ஏற்படுத்த முடியும். இணைப்பை ஏற்படுத்தும் முறைகளைப் பற்றி பின்வரும் பாடங்களில் படிப்போம். இந்த இணைப்பிற்குப் பயன்படும் நிறத்தை LINK பண்பின் மூலம் கொடுக்கலாம்.

Internet Explorer, Netscape Navigator போன்ற உலவிகள், சாதாரணமாக இணைப்புகளை நீல நிறத்தில் காட்டுகின்றன. இந்த நிறத்தை நாம் மாற்றிக் கொள்ள முடியும். உதாரணமாக, இந்த இணைப்பைப் பச்சை நிறத்தில் காட்ட

<BODY LINK = "Green">

எனும் குறிமுறையைப் பயன்படுத்த வேண்டும்.

VLINK பண்பு(Attribution)

இந்தப் பண்பு, நாம் ஏற்கனவே பார்த்த இணைப்புகளின் நிறத்தை மாற்றிக் காட்ட பயன்படுகிறது.
இன்டர்நெட் எக்ஸ்புரோர்ரும், நெட்ஸ்கேப் நேவிகேட்டரும் சாதாரணமாக இந்த இணைப்புகளை ஊதா நிறத்தில் காட்டுகின்றன.
இந்த நிறத்தையும் நாம் மாற்றிக்கொள்ள முடியும். ஏற்கனவே பார்வையிட்ட இணைப்புகளை சிவப்பு நிறத்தில் காட்ட

<BODY VLINK = "Red">

என்னும் குறிமுறையைப் பயன்படுத்த வேண்டும்.

ALINK பண்பு (Attribution)

சுட்டியை ஒரு இணைப்புச் சொல்லின் மீது நிறுத்தும்போது ஏற்படும் இணைப்பு இயங்கு இணைப்பு (Active Link) எனப்படும்.
இன்டர்நெட் எக்ஸ்புரோளரும், நெட்ஸ்கேப் நேவிகேட்டரும் இயங்கு இணைப்பினை சாதாரணமாக சிவப்பு நிறத்தில் காட்டும். இந்த இணைப்பிற்கும் நாம் வேண்டிய நிறத்தைக் கொடுக்கலாம்.

உதாரணமாக,

<BODY ALINK = "aqua">

என்னும் குறிமுறை இணைப்பினை அக்வா நிறத்தில் காட்டும்.

உதாரண நிரல் ஒன்றைப் பார்ப்போம்.

<HTML>
<HEAD> <TITLE>LINK ATTRIBUTION In BODY TAG</TITLE>
</HEAD>
<BODY LINK = "Green" VLINK = "Red" ALINK = "aqua">
இணையப் பக்கங்களில் உள்ள இணைப்புகளுக்கு இணைப்பு பண்புகளும் மூலம் நாம் நினைக்கும் நிறத்தைக் கொடுக்க முடியும்.
<a href="http://www.facebook.com/carz4yew"> கார் படங்கள்</a>
</BODY>
</HTML>

* இந்த நிரலை NotePad++ ல் எழுதி .html என்ற விரிவுடன் சேமித்து சோதனை செய்துகொள்ளுங்கள்.

இணையப் பக்கங்களில் உள்ள இணைப்புகளுக்கு இணைப்பு பண்புகளும் மூலம் நாம் நினைக்கும் நிறத்தைக் கொடுக்க முடியும்.
மேற்கண்ட நிரலில் உலவிகள் சாதாரணமாக இணைப்புகளைக் காட்டும் நிறத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிறங்களைக் கொடுத்திருக்கிறேன்.

1. இணைப்பு பச்சை நிறத்தில் காட்ட வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறேன்.
2. ஏற்கனவே பார்வையிட்ட(சொடுக்கப்பட்ட பிறகு) இணைப்பை சிவப்பு நிறத்திலும்
3. இணைப்பின் மீது சுட்டியை (Mouse) நிறுத்தும்போது தோன்றும் நிறமானது அக்வா     நிறத்திலும் காட்டபட வேண்டும் என நிரல்வரிகளை அமைத்திருக்கிறேன்.

 


PREV     NEXT

0 comments:

Post a Comment